நான்கு பகுதிகளைக் கொண்ட என் வழி! 🏞 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், முதலாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
என் வழி!
வேத பகுதி: 1 இராஜாக்கள் 3:3-15
வேதாகம நிகழ்வு: சாலொமோன் தனது வாழ்க்கையில் தேவனையே நினைத்து கொண்டார். அவருடைய காலத்தின் மிக வெற்றிகரமான ராஜாவானார்.
செய்தி: நீங்கள் எதைச் செய்தாலும், அதில் தேவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் புதிதாக ஏதாவது தொடங்குகிறீர்களா? அதைப் பற்றி இயேசுவிடம் பேசுங்கள்.
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- மனப்பாட வசனம் ( 5 mins)
- வேதாகம நிகழ்வு (25 mins)
- Game/ Craft நேரம் (10 mins)
🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.
பாடல் நேரம்
சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.
பேசலாம் வாங்க
நோக்கம்:
இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.
தேவையான பொருள்கள்: மூன்று சிறிய காகிதங்களில் “புதிய”, “பெரிய” மற்றும் “கடினமான” என்று எழுதவும். சீட்டுகளை / காகிதத் துண்டுகளை மடித்து ஒரு பெட்டிக்குள் வைக்கவும்.
செய்முறை:
- சிறுவர்களை ஒரு வட்டத்தில் நிற்க அல்லது உட்கார வைக்கவும்.
- ஒரு பாடலை இயக்கவும். சீட்டுகள் உள்ள பெட்டியை சிறுவர்களிடம் கொடுங்கள். இசை நிற்கும் வரை அவர்கள் அதை பக்கத்தில் உள்ள பிள்ளைக்கு பாஸ் செய்ய வேண்டும்.
- இறுதியில் பெட்டியைப் பெறும் பிள்ளை, ஒரு துண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். துண்டு “புதிய” என்று சொன்னால், அவர்கள் சமீபத்தில் புதிதாகத் தொடங்கும் காரியத்தைச் சொல்ல வேண்டும் (உதா. பள்ளியில் புதிய ஆண்டைத் தொடங்குதல்). துண்டு “பெரிய” என்று சொன்னால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் “பெரிய” ஒன்றைச் சொல்ல வேண்டும் (உதா. புதிய கார் வாங்குதல்). இதேபோல், “கடுமையானது” என்று துண்டு கூறினால், அவர்கள் முயற்சிக்கும் கடினமான காரியம் அல்லது வீட்டில் கடினமான சூழ்நிலையைப் பற்றி பேச வேண்டும் (எ.கா. தேர்வு/ வியாதி, முதலியன)
- (விரும்பினால்) பதில் சொல்பவர்களுக்கு ஒரு சிறிய முட்டாய் வெகுமதியாக அளிக்கவும்.
- நேரம் அனுமதிக்கும் வரை விளையாட்டை தொடரவும்.மோகன் என்ற சிறுவனை குறித்த கதையைச் சொல்லி ஒரு கலந்துரையாடலை நடத்துங்கள்.
பின்பு இதை பகிரவும் :-
நாம் ஒவ்வொருவரும் புதிதாக ஒன்றைத் தொடங்குகிறோம் / ஏற்கனவே நமக்குப் பெரிய விஷயம் நடக்கிறது / கடினமான காரியத்தைச் செய்கிறோம். அந்த விஷயங்களில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இன்று நான் உங்களிடம் பேசப் போகிறேன். நீங்கள் ரெடியா?
மனப்பாட வசனம்
கை அசைவுகள் அல்லது ஏதேனும் ஒரு செய்முறையைப் (Actions) பயன்படுத்தி பின்வரும் மனப்பாட வசனத்தை சிறுவர்களுக்குக் கற்பிக்கவும்.
நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். [நீதிமொழிகள் 3:6]
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: 2இராஜாக்கள் 3:3-15
சம்பவ சுருக்கம்:
சாலொமோன் தனது தந்தை தாவீதுக்குப் பிறகு ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது. மக்கள் அவருடைய தந்தை தாவீது மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தனர். தாவீதின் மகனான அவன் மீது அவர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும். ராஜாவாக மாறுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் சாலொமோனுக்கு அவருடைய தந்தை, தாய், தீர்க்கதரிசி நாத்தான் மற்றும் நாட்டில் உள்ள பல பெரியவர்களின் ஆதரவு இருந்தது.
மற்றவர்களின் ஆதரவு சாலொமோனுக்கு இருந்தாலும் தேவனுடைய உதவியை கேட்டார் – சரியானதைச் செய்வதற்கான ஞானத்தைக் கொடுக்கும்படி கேட்டார். சாலொமோனுக்கு உதவி செய்வதில் தேவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், ஏனென்றால் சாலொமோன் செய்த காரியத்தில் தானாகவோ அல்லது மற்ற மனிதர்களின் உதவியோடும் மட்டும் செய்யாமல் தேவனை சேர்த்துக் கொண்டார். தேவன் அவருக்கு அளவிட முடியாத செல்வத்தையும் புகழையும் கொடுத்தார். உலகம் முழுவதிலும் உள்ள அனைவரையும் விட தேவன் அவரை ஞானமுள்ளவராக ஆக்கினார். அவருடைய சாதனைகளைப் பற்றி வேதத்திலிருந்து வாசிக்கலாமா (பிள்ளைகள் ஒருவரை 1 ராஜாக்கள் 4:29-34 ஐ படிக்கும்படி சொல்லுங்கள்)
இன்றைய மனப்பாட வசனமும் (நீதிமொழிகள் 3:6) சாலொமோனால் எழுதப்பட்டது. சாலொமோன் ராஜா வெற்றிக்கான ரகசியத்தைக் கண்டுபிடித்தார் – அது என்னவென்றால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய அல்லது பெரிய காரியத்திலும் தேவனை முன் வைப்பதே ஆகும்.
விளையாட்டு நேரம்
தேவையான பொருள்கள்: ஐந்து வெவ்வேறு பருப்பு வகைகள் / தானியங்கள் (பச்சை, உளுந்து, சானா, வெள்ளை அரிசி, சிவப்பு அரிசி போன்றவை) கலந்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
- வகுப்பை சிறிய குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு அணிக்கும் சம அளவு கலவையைக் கொடுத்து, அதைப் பிரித்து ஒவ்வொரு அணிக்கும் நீங்கள் கொடுத்த 5 பேப்பர் கப்/கிண்ணங்களுக்குள் போடச் சொல்லுங்கள்.
- முதலில் முடிக்கும் அணி வெற்றி பெறும்.
- விளையாட்டின் முடிவில், பிள்ளைகள் யாராவது விளையாட்டைப் பற்றி தேவனிடம் பேசினார்களா என்று கேளுங்கள். பெரும்பாலான சிறுவர்கள் விளையாட்டில் தேவனை சேர்க்க மறந்திருப்பார்கள்.
- பின்னர் இந்த செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் – “நீங்கள் செய்யும் சிறிய அல்லது பெரிய காரியங்களில் தேவனை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படி செய்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்”
கைவினை நேரம்
தேவையான பொருள்கள்: ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு சிறிய செவ்வக வடிவிலான சார்ட், ஒரு விதை மற்றும் சிறிது அளவு மணல் ஆகியவற்றைக் கொடுங்கள்.
செய்முறை:
- விதையை கீழே ஒட்டவும்.
- விதையை சுற்றிலும் பசை தடவி சிறிது மணலை தூவ சொல்லுங்கள் .
- மார்க்கரைப் பயன்படுத்தி சில வேர், தண்டு மற்றும் இலைகளை வரையவும்.
- மேலே எழுதச் சொல்லுங்கள் – “நான் சிறுவன் தான் ஆனால் தேவனை என் வாழ்வில் சேர்ப்பதால் பெரியவனாவேன்.”
- அவர்கள் சாடின் ரிப்பனில் இருந்து ஒரு வளையத்தை உருவாக்கி அதை தங்கள் வீட்டில் நினைவூட்டலாக தொங்கவிடலாம்.

டாட்டா
அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment